• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்-தலைமை தேர்தல் அதிகாரி

ByA.Tamilselvan

Nov 9, 2022

தமிழகத்தில் ஆண்வாக்காளர்களை விட பெண்வாக்காளர்களே அதிகம் என தமிழக தலைமை தேர்தர் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசி அவர்.. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 95 ஆயிரத்து 103 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 23 ஆயிரத்து 321 பேர் உள்ளனர். 3-ம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர். தமிழகத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சென்னையில் வருகிற 12, 13 மற்றும் 26, 27-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.