• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பு…

ByKalamegam Viswanathan

Feb 6, 2023

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் புஷ்பலதா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜவஹர் முன்னிலை வகித்தார்.
அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதத்திற்குரிய ஊதியம் வழங்காததை கண்டித்து அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் சரவணக்குமார் பேசுகையில் ‘ஆட்சி மாறினாலும் ஆசிரியர்களின் அவலநிலை மாறவில்லை. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதார ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது கண்டிக்கத்தக்கது, என்று போசினார் தொடர்ந்து ஜனவரி மாத சம்பளத்தை வழங்க கோரியும் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மாவட்ட செயலாள் சரவணகுமார் பொருளாளர் உதயகுமார், மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் மாரியப்பன், வட்டார செயலாளர்கள் ரத்தினம், முத்துராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார பெருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.