விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள, பிரசித்திபெற்ற அருள்மிக ஸ்ரீகூடமுடைய அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 3 நாட்களாக கோவில் வளாகத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. அதனையடுத்து மூலவர் ஸ்ரீகூடலிங்கம் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பின்னர் ஸ்ரீகூடலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீகூடலிங்கம் சுவாமிக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் சிவகாசி, விருதுநகர், காளையார்குறிச்சி, திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர் வளர்மதி, கோவில் தக்கார் ஜவஹர் உட்பட அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.