• Tue. Apr 23rd, 2024

கொரோனாவை தொடந்து உலகை மிரட்டும் குரங்கு அம்மை நோய்

ByA.Tamilselvan

May 19, 2022

உலகை மிரட்டும் வகையில் கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றை புதிதுபுதிதாக அவதாரம் எடுத்து மிரட்டிவரும் நிலையில் பல புதிய தொற்றுகள் உலகை அச்சுறுத்தி வருகின்றன.அம்மை நோய் சரி அதென்ன குரங்கு அம்மை நோய் என்றால். குரங்களுக்கு வரகூடிய ஒரு வகை வைரஸ்தொற்று தற்போது மனிதர்களுக்கு பரவியிருக்கிறது என சொல்லாம்.
பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.இதை தொடர்ந்து இந்த நோய் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் பரவி 40க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.மாட்ரிட்டில் மட்டும் 23 பேருக்கு இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து அமெரிக்காவிலும் ஒருவருக்கு குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது.
ஆப்ரிக்காவில் ஏற்படும் நோயான இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *