குவாட் மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் நாட்டிற்கு சென்றிருக்கும் ஜோபைடன் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அமைக்கப்பட்ட குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சிமாநாடானது, ஜப்பான் நாட்டில் வரும் 24-ஆம் தேதி அன்று நடக்கவிருக்கிறது. அதில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசவிருப்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருக்கிறார். குவாட் அமைப்பில் இருக்கும் நாடுகள் புதிதாக பொருளாதாரத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார்கள். அவர்கள் சேர்ந்து, இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமைக்கவிருக்கிறார்கள். இந்தோ பசுபிக் பொருளாதார கட்டமைப்பின் தொடக்க விழாவில் அமெரிக்க அதிபர் பங்கேற்க இருக்கிறார். இந்தோ-பசிபிக் நாடுகளின் தலைவர்களும் அதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ஜப்பானுக்கு செல்வதற்கு முன்பாக தென்கொரிய நாட்டிற்கு ஜோ பைடன் சென்று அங்கு நடக்கும் உச்சிமாநாட்டில் பங்கேற்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.