
அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகள் அனைவருக்கு மொஹரம் வாழ்த்து
மொஹரம் ,முகரம்,முஃகர்ரம், என்பது இஸ்லாமியர்களின் பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது.
இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மொஹரம் பண்டிகை முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கர்பாலா போரில் கொல்லப்பட்டதை துக்க நாளாக கடை பிடிக்கின்றனர்.

எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக சன்னி பிரிவினர் இந்த திருநாளை கொண்டாடுகின்றனர்.
மொஹரம் மாதத்தின் 10ம் நாள் தியாகத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இஸ்லாமியர்கள் இந்த மாதத்தின் 10ம் நாள் மட்டும் நோன்பு வழக்கமாக வைத்துள்ளனர்.சிலர் இந்த திருநாளில் ஆசுரா என்று தங்களைத் தாங்களே கத்தியால் அடித்துக் காயப்படுத்திக் கொண்டு தியாகத் திருநாள் கடைப்பிடிக்கின்றனர்.

அன்புடன் என்று என் நினைவில் ரத்த உறவில் வழிவந்த என் முப்பாட்டனர் பேரன் பிள்ளைகளான இஸ்லாமியா்கள் சகோதரர்களுக்கும், சகோதரரிக்கும் அனைவருக்கும் என்னுடைய சார்பாக அன்பு கலந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்