சென்னையில் நடைபெற்று வரும் 44 வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணி பதக்கம் வென்ற சாதனை படைத்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதன் முறையாக மகளிர் இந்தியா ஏ அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலியே இந்திய மகளிர் அணி முதன் முறையாக பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த போட்டியில் அமெரிக்கா தங்கமும்,ஜார்ஜியா வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளன. முதல் முறையாக பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.