மோடிக்கு பிள்ளையார் மலர் தூவுவது போன்ற சர்ச்சை போட்டோ இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவு
நேற்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விதவிதமான விநாயகர் சிலைகள் குறித்த புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன.அந்தவகையில் பிரதமர் மோடியை நடுவில் அமர வைத்து இருபுறமும் இரண்டு விநாயகர்கள் மலர் தூவுவது போன்ற புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடவுளுக்கு மேலானவராக மோடியை சித்தரித்து வரைப்பட்ட படம் பலருக்கும் வேதனையை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பலரும் இந்துக்களின் மனதை புண்படுத்தவேண்டாம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்துக்களின் மனதை புண்படுத்திய மோடியின் படம்…
