• Mon. Apr 29th, 2024

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை செங்கலை வைத்து காட்டியவர் மோடி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ப்ளிச் பேட்டி..,

Byகுமார்

Mar 23, 2024

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை செங்கலை வைத்து காட்டியவர் எதை சாதித்தார் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாரா? அல்லது கடன் தரும் நிறுவனத்திடம் பேசினார்களா ?ஆனால் நான் பலமுறை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்*

பிஜேபி நோட்டாவிற்கு  கீழ் தான் ஓட்டு வாங்கும் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரையில் பேட்டி..,

அதிமுகவிற்கு மக்கள் ஆதரவு இருப்பதை கண்டு ஸ்டாலின் பொறாமையால் பிஜேபிக்கும்,  அதிமுகவிற்கு கள்ள உறவு இருக்கிறது என்று ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்கிறார் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மதுரையில் பேட்டி.

மதுரை பசுமலையில் வைத்து மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன், வி.வி.ராஜன்செல்லப்பா-வை சந்தித்து ஆசிபெற்றார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த ராஜன்செல்லப்பா

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார்  தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

இந்த தேர்தலில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடியார் மக்களுக்கு அளித்துள்ளார். குறிப்பாக மதுரையில் மெட்ரோ ரயில்,  வேளாண் பொருளுக்கான சர்வதேச பரிசோதனை மையம் மதுரையில் அமைக்கப்படும், தேசிய மருந்து சார் ஆராய்ச்சி கழகம் மதுரையில் அமைக்கப்படும், மதுரை மண்டலத்தில் தேசிய கைத்தறி தொழில் கல்லூரி அமைக்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவுபடுத்தி அமைக்கப்படும் என்று பல்வேறு திட்டங்களை மதுரையில் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று வாக்குறுதி கொடுத்துள்ளோம்.

ஏற்கனவே காவிரி பிரச்சனையில் நாடாளுமன்றத்தை 21 நாட்கள் அவையை முடக்கி உரிமையை நாங்கள் பெற்றுக் கொடுத்தோம் அதேபோல் திமுக எந்த திட்டமும் கொண்டவரவில்லை.

நாங்கள் வெற்றி பெற்று மத்திய அரசை கடுமையாக வலியுறுத்தி திட்டங்களை பெற்று தருவோம்.

எம்ஜிஆர் என்றால் அதிமுக, ஜெயலலிதா (அம்மா) என்றால் அதிமுக, தற்பொழுது எடப்பாடியார் என்றால் அதிமுக என்ற நிலை உருவாகிவிட்டது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம் ,அதனைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் மதுரை நாடாளுமன்றத்துக்கு உட்பட்ட ஆறு தொகுதிகள் திமுக விற்கும் எங்களுக்கும் 65,000 வாக்கு வித்தியாசம் தான். இந்த நாடாளுமன்ற தேர்தலில் 35 ஆயிரம் வாக்குகள் பெற்றாலே நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்றார்.

இன்றைக்கு திமுக மீது மிகப்பெரிய அதிருப்தியில் மக்கள் உள்ளார்கள். போதை வஸ்துகள் எங்கு பார்த்தாலும் பரவி உள்ளது. மதுரையின் நாடாளுமன்ற தொகுதியில் போட்டிடும் கழக வேட்பாளர் டாக்டர் சரவணன் வெற்றி பெற்று மக்கள் உரிமைக்காக குரல் கொடுப்பார். 

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒற்றை செங்கலை வைத்து காட்டியவர் எதை சாதித்தார். எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசு அழுத்தம் கொடுத்தாரா? அல்லது கடன் தரும் நிறுவனத்திடம் பேசினார்களா ?ஆனால் நான் பலமுறை மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினேன்.

 அதில் கூட பல துறைகளில் பேப்பர் செல்வதால் கடினமாக உள்ளது ஆகவே ஒரு குடையில் கீழ் வந்தால் சிறப்பாக அமைக்கும் என்று கூறினேன். அது மட்டும் அல்ல  எய்ம்ஸ் மருத்துவமனை துறைக்கு தலைவராக நாகராஜ் என்பவர் நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாம் கடிதம் எழுதினேன் அதனை தொடர்ந்து அவரை அமர்த்தினார்கள் .

தற்போது அவர் மரணம் அடைந்து விட்டார் ஆனால் எதையும் செய்யாமல் ஊடகச் செய்தியில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பாடுபட்டேன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வெங்கடேசன் கூறியுள்ளார் நான் எழுதிய கடிதம் என்னிடம் பத்திரமாக உள்ளது. நிச்சயம் மதுரை, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குரல் கொடுப்பார்கள் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் தமிழகத்திற்கு வரும் அப்போது எடப்பாடியார் முதலமைச்சராக இருப்பார் அந்த நிகழ்வில் அவரும் பங்கேற்பார் எனத் தெரிவித்தார்.

நடைபெறும் தேர்தல் என்பது திமுகவிற்கும், அதிமுக மட்டும் தான் இன்றைக்கு பிஜேபி டெபாசிட் வாங்கி விட்டால் அதை நான் வெற்றியாக கருதுகிறேன். இன்றைக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர்கள் தற்போது போட்டியிடுகிறார்கள். ராமநாதபுரத்தில் கூட சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் போட்டியிடுகிறார் பிஜேபி தங்களின் வாக்குகளை கூட்டி காமிக்க இதுபோன்று செய்கிறார்கள். பிஜேபி நோட்டாவிற்கு  பின்னுக்குகூட வரலாம் சிலர் தொகுதியில் நிலைமை அப்படி உள்ளது தற்போது கமல் ஓட்டு கூட குறைந்து விட்டது என்றார்.

இன்றைக்கு பன்னீர்செல்வம் உள்ள சூழ்நிலைக்கு அவரே தான் காரணம். அவர்தான் தவறான முடிவு எடுத்து அவர் அந்த கஷ்டத்தை அனுபவித்து வருகிறார். கட்சிக்கும் அவருக்கும் தற்போது எந்த சம்பந்தமும் இல்லை.

இன்றைக்கு மக்கள் இடத்தில் அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதைக் கண்டு பொறாமை அடைந்த ஸ்டாலின், பிஜேபிக்கும் அதிமுகவிற்கும் கள்ள உறவு உள்ளது என்று கூறி வருகிறார்.கள்ள உறவு இருப்பதாக கூறும் ஸ்டாலின் இதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளார்? ஸ்டாலின் அறியாமையால் பேசி வருகிறார். அவருடைய பேச்சு மக்கள் மத்தியில் எடுபடாது. ஏனென்றால் ஸ்டாலின் பலவீனம் ஆகிவிட்டார். இந்த தேர்தலில் அவரது பொய் பிரச்சாரம் எடுபடாது என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *