• Fri. Jan 24th, 2025

புளிய மரத்தில் மோதி இருவர் பலி

ByP.Thangapandi

Mar 23, 2024

மதுரை செல்லூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஸ்ரீதர், தீனேஷ்., ஸ்ரீதர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்று வருகிறார்., இதே போன்று தினேஷ் தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.,

ஒரே பகுதியைச் சேர்ந்த இருவரும் திருமங்கலம் அருகே உள்ள நக்கலக்கோட்டையில் நடந்த உறவினர் வீட்டு இல்ல விழாவில் கலந்து கொள்ள ஆர்.15 இருசக்கர வாகனத்தில் வந்து இல்ல விழாவில் கலந்துவிட்டு மீண்டும் செல்லூருக்கு உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர் வழியாக சென்று கொண்டிருந்த போது புளியங்கவுண்டன்பட்டி எனும் இடத்தில் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகினர்.,

மரத்தில் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.,

தகவலறிந்து விரைந்து வந்த செக்காணூரணி காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

இருசக்கர வாகனத்தில் வந்த இரு கல்லூரி மாணவர்கள் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,