

தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் கோவிலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. விழாவை ஒட்டி நடந்த சிறப்பு பூஜையில் பாரதப் பிரதமர் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க வேண்டி சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு ,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மண்டல பொதுச் செயலாளர் நந்தகோபால், மண்டல் துணைத்தலைவர்கள் பரமன், விமல் குமார், எஸ். எம் ராஜா ,ஊரக வளர்ச்சி பிரிவு தலைவர் நாகேந்திரன் ,துணைத் தலைவர் கே.கே.செல்வம் ,மாவட்ட விவசாய அணி துணை தலைவர் செல்வராஜ், இளைஞர் அணி தலைவர் ராஜீவ் காந்தி, கல்வியாளர் பிரிவு துணைத் தலைவர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
