• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

ஆண்டிபட்டியில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வட்டார விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் நல சங்கம் சார்பில் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு சக்கம்பட்டி சீதாலட்சுமி பெட்ரோல் பங்க் அருகில் இருந்து விஸ்வகர்மா திரு உருவ படத்துடன் வானவேடிக்கை முழங்க , ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தை அடைந்தது . அங்கு நடந்த விழாவில் சிற்பக்கலை, கொல்லுா தொழில், தச்சு தொழில், நகை தொழில், பாத்திர தொழில் செய்யும் விஸ்வகர்மா சமுதாய பெரியவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். அதனைத் தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்திருந்தனர்.