திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டு காலப் பயணத்தை இப்போதே திட்டமிடும் நோக்கில், கட்சியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு’ ஒன்றை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

கட்சியின் சீனியர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் இளம் தலைவர்கள் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளை உள்ளடக்கியதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழக மறு சீரமைப்பு ஆலோசனைக் குழு உறுப்பினராக திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர், முன்னாள் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்,ஒட்டன்சத்திரம் எம். எல். ஏ. அர.சக்கரபாணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



