• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ஸ்டாலினிடம் நலம் விசாரித்த மோடி

ByA.Tamilselvan

Jul 15, 2022

முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக நலம் விசாரித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத்தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து மருத்தவப்பரிசோதனை நடப்பதாக காவேரி மருத்தவமனை சார்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்பவும் வாழ்த்து தெரிவித்தார்.