• Tue. Sep 8th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆதிதிராவிடர் மயானம் அமைக்க கருப்பையா எம்.எல்.ஏ., ஆய்வு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா தனிச்சியம்ஊராட்சிக்கு உட்பட்ட செம்பு குடி பட்டியில் ஆதிதிராவிடப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக வாய்க்கால் கரை பகுதியில் மயானமாக பயன்படுத்தி வந்த நிலையில்புதிதாக மயானம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகதமிழக முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பல்வேறு மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்களில் ஏராளமான கோரிக்கை மனுக்கள் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பொதுமக்களுக்கு நன்றி சொல்ல சென்ற போது ஆதிதிராவிடர்க ளுக்கு புதிதாக மயான அமைப்பது சம்பந்தமான கோரிக்கை மனுவைஅவரிடமும் கொடுத்து முறையிட்டனர்.அதனால் நேற்று கருப்பையா எம். எல். ஏ., நேரில் சென்று புதிதாக மயானம் அமைப்பதற்கான இடத்தினைநேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-இந்த பகுதி யைச் சேர்ந்த ஆதிதிராவிடப் பொதுமக்கள் பல ஆண்டுகளாக கால்வாய்கரையை எந்தவித அடிப்படை யும் வசதியும் இல்லாமல் மயான மாக பயன்படுத்தி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இதில் புதிதாக மயானம் அமைத்து குடிநீர் தொட்டி கட்டி சுற்றுச்சுவர் உள்ளிட்டவை களுடன் நவீனஅமரர் பூங்காவை உருவாக் கிடதிட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார். உடன் வாடிப்பட்டி தாசில்தார் சுந்தரவேல் வருவாய் ஆய்வாளர் விஜயா, கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோர் வந்திருந்தனர்.