• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்..,

ரயிலில் பிரயணம் செய்யும் பயணிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று மாலை மதுரை ரயில் நிலையத்தில், ரயில்வே ஸ்டேஷன் சார்பு ஆய்வாளர் முத்துபால் பயணிகள் எவ்வாறு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

முத்து பால் கூறுகையில் ஆண்கள் படியில் அமர்ந்து பயணம் செல்ல வேண்டாம், பெண்கள் ஜன்னல் ஓரம் இருக்கையில் பயணம் செய்யும் போது தங்கள் நகைகளை சேலையால் நன்றாக மறைத்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் பொது வெளியில் தாங்கள் எங்கு செல்கின்றோம், எப்போது வருவோம் என்று கூற வேண்டாம், அறிமுகம் இல்லாதவர்களிடம் மிகவும் எச்சரிக்கை யாக பயணம் செய்ய வேண்டும், பிஸ்கட் போன்றவை தவிர்க்க Software என்று பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்தார்.