மதுரை நாகமலை புதுக்கோட்டை எஸ் வி என் கல்லூரியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கல்லூரியின் மைதானத்தில் 2,500 மாணவர்கள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து காமராஜரின் உருவம் தெரியும் வண்ணம் நின்றனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் பேசும்போது:
ஒரு வாரமாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் தாகூர் என சிறப்பாக நடத்தி வருகிறார் அவருக்கு பாராட்டுக்கள். 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் ஒன்பது ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் என்பதே கிடையாது லஞ்சம் தவிர்த்து ஆட்சி நடந்தது. புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியில் லஞ்சம் தவிர்க்கும் முயற்சியில் நடைபெறுகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் தவிர்க்கப்பட்டிருக்கிறது அதற்காக பாராட்டுக்கள். தனியார் உதவி பெறும் பள்ளியில் அரசு பள்ளிகள் அரசு நியமனம் போன்றவற்றில் லஞ்சம் தவிர்க்கப்படுகிறது.ஆசிரியர் பணி நியமனம் மாறுதல் உள்ளிட்டவைகளுக்கு லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் பல துறைகளில் லஞ்சம் தவிர்க்கப்பட வேண்டும் அதற்கு முதல்வர் விஜயின் ஆட்சி செய்யும்.
லஞ்சம் தவிர்க்க காமராஜர் ஆட்சி 9 ஆண்டுகள் எப்படி செயல்பட்டதோ அதேபோல் விஜய் ஆட்சியை கடந்த ஒரு மாதமாக நல்ல முயற்சி எடுத்து வருகிறது. இன்னும் பல முயற்சிகள் எடுத்து பல துறைகளில் பஞ்சங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விஜய் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள் தமிழ்நாட்டில் மீண்டும் லஞ்சம் தவிர்த்த காமராஜர் ஆட்சி ஐந்தாண்டு நடைபெற வேண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை பாராட்டுக்கள் பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க ஓங்குக.

நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்பி மாணிக்கம் தாகூர் பேசும் போது:
வெயிலில் நின்று கொண்டிருக்கிறீர்கள் விட்டமின் டி உங்களுக்கு நன்றாக கிடைக்கிறது.பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி போன்றவற்றில் முக்கிய முயற்சி எடுத்தார்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மாடல் அரசை யாராலும் கொண்டு வர முடியவில்லை தற்பொழுது முதல்வர் விஜய் அவர்கள் அதை தொடங்கி இருக்கிறார்.
அது நல்ல துவக்கம் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது. நேர்மையான ஆட்சியாக வழங்குவார் வழங்க முயற்சிக்கிறார். அதற்காக விழாவிற்கு வந்த முன்னாள் நீதி அமைச்சர் காங்கிரஸ் கட்சியின் காரிய கமட்டி உறுப்பினர் சிதம்பரம் அவர்களுக்கும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மாணிக்கம் தாகூர்.




