• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தெலங்கானாவில் 24 விரல்களுடன் பிறந்த அதிசய குழந்தை..!

Byவிஷா

Apr 18, 2023

தெலங்கானா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், 24 விரல்களுடன் குழந்தை பிறந்துள்ளதால் அனைவரும் அதிசயத்துடன் அந்தக் குழந்தையைப் பார்த்து செல்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் கொருட்லா அரசு மருத்துவமனையில் வினோதமான சம்பவம் நடந்துள்ளது. நிஜாமாபாத்தில் உள்ள ஏர்காட்டைச் சேர்ந்த ரவாலி என்ற பெண்ணுக்கு திங்கள்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு மொத்தமாக 24 விரல்களுடன் பிறந்துள்ளது. குழந்தைக்கு இரண்டு கால்கள் மற்றும் இரு கைகளிலும் ஆறு விரல்கள் என மொத்தம் 24 விரல்கள் இருப்பதை மருத்துவர்கள் கவனித்தனர். இந்த அதிசய குழந்தையை அங்கிருந்த மக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர்.