• Wed. Apr 24th, 2024

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேசிய லீக் சார்பாக இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி

Byதரணி

Apr 18, 2023

சிவகாசியில் தேசிய லீக் சார்பாக ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாமிய நாட்காட்டியின்படி ரமலான் மாதமானது இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான புனித மாதம் ஆகும். இந்த மாதத்தின் போதுதான் இறைத் தூதரான முகமது நபி அவா்களின் மீது இறைவன் அல்லாஹ் அவா்களால் புனித குரான் இறக்கி வைக்கப்பட்டது என்று இஸ்லாமிய புராணங்கள் தொரிவிக்கின்றன. இஸ்லாமின் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ரமலான் நோன்பு இருப்பது ஒரு கடமையாகும். ரமலான் மாதம் முழுவதும் நாள்தோறும் பின்னிரவில் உணவருந்திவிட்டு சூரியன் மறைவு வரை நோன்பு மேற்கொள்ளப்படும். 30வது நாளில் பிறை தெரிந்ததும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.


உலக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் இப்பண்டிகை தமிழ்நாட்டிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் அரசு விழாவாகவும் , சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக கடைபிடிக்கப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிவகாசி ராயல் மினி மகாலில் தேசிய லீக் சார்பாக இலவச வேஷ்டி ,சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தேசியலீக் சட்ட அலோசகர் வி.சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.இந்திய தேசிய லீக் மாநகர் தலைவர் முகமது கான் ,செயலாளர் முத்து விலாசா,பொருளாளர் முகமது காசீம் இப்ராஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய தேசிய லீக் மாவட்ட கொள்கைப்பரப்பு செயலாளர் கராத்தே அக்பர் வரவேற்புரையாற்றினார்.விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி 28 வது வார்ட் மாமன்ற உறுப்பினர் ஜி.வெயில்ராஜ்,திமுக மாவட்ட துணை செயலாளர் ராமமூர்த்தி,மாநகராட்சி 38 வார்ட் மாமன்ற உறுப்பினர் ஆர்.ரேணு நித்திலா ,ஜமால் முகமது அரபிக் கல்லூரி முன்னாள் முதல்வர் முகமது சிந்தாஷா,தொழில் அதிபர் செய்யது இப்ராஹிம் மற்றும் ராயல் ரபீக் ,அகில இந்திய காங்கிரல் மூத்த நிர்வாகி ஜப்பார்.சிறுபான்மை மாவட்ட தலைவர் முஹமது இஸ்மாயில்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகி அப்துல் சர்தார்,முஸ்லீம் தொழில்வர்த்த சங்கம் திருமண மஹால் முன்னாள் தலைவர் செம்மல் எம்.எஸ்.எல்.சேட்,மற்றும் நகர பிரமுகர்களும் , மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளும் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஏழை,எளிய மக்கள் 400 பேருக்கு இலவச வேஷ்டி, சேலைகளை இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் இ.செய்யது ஜஹாங்கீர் வழங்கினார். மேலும் கண்ணகி காலனி ஜயப்பன் காலனி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *