

மதுரை மாவட்ட சத்திரப்பட்டி காவல்நிலையம் மற்றும் மதுரை மாவட்ட மாநகர எல்லைக்குட்பட்ட காவல் நிலைய பகுதிகளில் சில நாட்களாக விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தது. அதனை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் ஊமச்சிகுளம் உட்கோட்ட துனை காவல் கண்காணிப்பாளர் பாலசுந்தரம் ஆகியோரின் மேற்பார்வையில் ஊமச்சிகுளம் வட்ட காவல் ஆய்வாளர் சாந்திபாலாஜியின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும், அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை கைது செய்தும் காணாமல் போன 5 இருசக்கர வாகனங்களையும் தனிப்படையினர் மீட்டுள்ளனர்.
இவர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டியுள்ளார். மூன்று குற்றவாளிகளும் சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

