

மதுரையில் இருந்து இலங்கை செல்லும் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இயந்திர கோளாறு காரணமாக புறப்பட தாமதம். இரண்டு மணி நேரமாக பயணிகள் விமானத்துக்குள் அவதி..
மதுரை விமான நிலையத்திலிருந்து இலங்கை கொழும்புவிற்கு தினமும் விமானம் சென்று வருகிறது.

இந்த நிலையில் இன்று மதியம் 3:50 புறப்பட வேண்டிய விமானம் புறப்படவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக 183 பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே அவதி அடைந்து வருகின்றனர்.
இயந்திர கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பயணியிடம் தெரிவிக்கப்பட்டு எப்போது புறப்படும் என தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர்.

