• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

ஆவின் பால் பண்ணையை அமைச்சர் பர்வேஸ் ஆய்வு..,

ByS. SRIDHAR

Jun 13, 2026

புதுக்கோட்டையில் இன்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் புதுக்கோட்டை மாவட்ட ஆவின் பால் பண்ணையை ஆய்வு செய்தார்.

முதலில் அவரை வரவேற்று அதிகாரிகள் இதனைத் தொடர்ந்து பால் பதப்படுத்தும் இடத்திற்கு ஆய்வுக்கு அழைத்துச் சென்றனர் அப்போது சுகாதார பணிக்காகும் வகையில் கையில் கிளவுஸ் மற்றும் தலையில் துணி கவசம் அணிந்து கொள்ள கூறி அமைச்சருக்கு கொடுக்கிற அதிகாரிகளும் கவசம் மற்றும் கிளவுஸ் அணிந்து கொண்டனர்.

ஆனால் அமைச்சர் தலைக்கவசம் மற்றும் கிளவுஸ் பெற்றுக் கொண்டு அதை அணியாமலேயே பால் பதப்படுத்தும் இடம் உள்ளிட்டவைகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அமைச்சரோடு உடன் சென்ற தமிழக வெற்றி கழகத்தினரும் சுகாதாரத்தை பேணி காப்பதற்கு எந்த வித பாதுகாப்பு கவசங்களையும் அறியாமல் சென்றது அதிகாரிகள் என்ன சொல்வது என்று தெரியாமல் விதி பிடுங்கி நின்று முகம் சுழித்தனர்.

இதனைத் தொடர்ந்து நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற அமைச்சர் தினந்தோறும் எவ்வளவு பால் கொள்முதல் செய்யப்படுகிறது எவ்வளவு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது பால் பதப்படுத்துவது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.