

திமுக அமைச்சர் நேரு காவல்துறை அதிகாரி குறித்து பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. காவல்துறை டி.எஸ் பியை புகழ்வது போல அதிகார போக்கில் அமைச்சர் கே.என் நேரு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்” இங்கே இருப்பவர் இன்று டிஎஸ்.பியாக இருக்கிறார். ஒருகாலத்தில் எஸ்.ஜ.யாக எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர் . ஒருவரை குற்றவாளியாக மாற்றுவது, குற்றவாளியை காப்பாற்றுவது இவரது திறமை . இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்லமுடியாது என்று பேசினார். காவல்துறை பற்றி அமைச்சரே இப்படி பேசலாமா என்று நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர்.
நன்றி -சாணக்யா