• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்!

ByA.Tamilselvan

Aug 24, 2022

உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் இடையிலான காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஜெயவீரராமபாண்டியன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையின் போது 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட 25 கிலோ சிக்கன், 5 கிலோ அழுகிய பழங்கள், 23 கிலோ காலாவதியான பரோட்டா, காலாவதியான 9 லிட்டர் குழம்பு, தடை செய்யப்பட்ட 9 கிலோ பிளாஸ்டிக் ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
25 கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், காலாவதியான உணவுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, 6 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.