• Tue. Mar 19th, 2024

களியக்காவிளை சோதனைச் சாவடியில் கனிமவளக் கடத்தல்.. கடத்தலுக்கு துணை போன காவல்துறை..

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையான களியக்காவிளை போலீசார் சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. 15000 ரூபாய் பறிமுதல். சோதனைச் சாவடியில் பணிபுரிந்த போலீசார் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை காவல்துறைக்கான சோதனைச் சாவடி உள்ளது. இங்கு தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் சரக்கு வாகனங்கள் அனைத்தும், இந்த சோதனைச் சாவடியில் காவலர்கள் சோதனை செய்து சோதனை சாவடியில் பதிவு செய்த பிறகு கேரளா செல்ல அனுமதிப்பார்கள்.

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களுக்கு களியக்காவிளை சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி பீட்டர் பால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் தீடீர் சோதனை நடத்தினர்.


இதில அங்கு பணிபுரியும் காவலர்களிடம் இருந்து 15000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் எஸ். ஐ சைய்யது குசேன், சிறப்பு உதவி ஆயவாளர் முத்து, மற்றும் காவலர்கள் அசோகன் மற்றும் TSP காவலர்கள் 5 பேர் சோதனையில் இருந்தனர். இதைதொடர்ந்து அந்த காவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கனிமவள கடத்தலுக்கு சோதனைச் சாவடியில் பணிபுரிந்த காவல்துறையினரும் உடந்தையாக செயல்பட்டது அம்பலமாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *