• Sun. Sep 27th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

20 நாடுகளில் 226 பேருக்கு ஒமைக்ரான் அதிர்ச்சி தகவல்

Byமதி

Dec 2, 2021

கொரோனாவின் உருமாறிய வைரசான ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20 நாடுகளில் 226 பேருக்கு உறுதியாகி இருப்பதாக அமெரிக்க தொற்றுநோய் நிபுணர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆண்டனி பாசி கூறும்போது, “இது டெல்டா போன்ற பிற வகை வைரஸ்களில் இருந்து வித்தியாசமான உருமாற்றங்களை கொண்டுள்ளது. இருப்பினும் இது மிகவும் பரவக்கூடியதா என்பதை தீர்மானிப்பது கடினமாக உள்ளது. மேலும் இந்த வைரஸ் மிக வேகமாக பரவுகிறது. அதாவது இதை கண்டறிந்து சில நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில் 20 நாடுகளில் 226 பேருக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய சுழல்” என தெரிவித்தார்.