மதுரை பைபாஸ் சாலை பகுதியில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவரின் வீட்டில் காவல்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாடக்குளம் பகுதியில் பட்டதாரி இளைஞர் அவர் குடும்பத்திற்கு சொந்தமான வயல்வெளிக்கு சென்று இரண்டு கட்டைப் பைகளில் ஆடைகளை தீயிட்டு எரித்ததாக அந்த பகுதியில் மாடு மேய்த்த நபர் தகவல் அளித்த நிலையில் தற்போது பட்டதாரி இளைஞர் ஆட்டோ மூலமாக வயல்வெளி பகுதிக்கு சென்று வருவது தொடர்பான சிசி டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பட்டதாரி இளைஞர் சென்று வந்த பகுதியில் தற்போது காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் .- அந்த பகுதியில் நகைகளை ஏதும் பதுக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.