அயோத்தியில் ராமர் பிறந்த இடமான ராம ஜென்மபூமி மீது பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் உரிமை கொண்டாடின. இதனால் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் அசம்பாவிதமும் நடந்தேறியது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையான மோதல் அதிகமானது. 70 ஆண்டுகளாக நீடித்த இந்த விவகாரம், பல ஆண்டுகளாக நடந்த வழக்கில் அந்த இடம் இந்துக்களுக்கு சொந்தம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததை, அடுத்து இடத்தில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. சமீபத்தில் தான் பிரதமர் மோடி கோவிலுக்கானா அடிக்கல் நாட்டினார்.

தற்போது பா.ஜனதா கட்சி, உத்தரபிரதேசத்தில் உள்ள மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமான கிருஷ்ண ஜென்மபூமி மீது பா.ஜனதா குறிவைத்துள்ளது. கிருஷ்ண ஜென்மபூமி அருகே மசூதிகள் அமைந்துள்ளன. அந்த மசூதி நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி, பல்வேறு இந்து அமைப்புகள் ஏற்கனவே மனு அளித்துள்ளன.
இந்தநிலையில், ராம ஜென்மபூமியை தொடர்ந்து, பா.ஜனதாவின் செயல்திட்டத்தில் மதுரா இடம்பெற்று இருப்பதாக உத்தரபிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்படும் நிலையில், அடுத்த நடவடிக்கை, மதுராதான். ராமர் புகழ் வாழ்க. ஜெய் ஸ்ரீ ராதே கிருஷ்ணா.’’ என்று அவர் கூறியுள்ளார்.
இந்த கருத்து உ.பியின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என கருத்தப்படுகிறது. மேலும், வருகிற சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டே இந்த மாதிரியான கருத்துக்களை பா.ஜனதா கூறிவருவதாக அரசியல் விம்சகர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ நல்ல இருக்கற நாட்டுல மக்கள் மத்தியில் தேவை இல்லாத கருத்துக்களை திணித்து அதன்மூலம் அரசியல் லாபம் பெறுவது ஏற்புடையது அல்ல.