• Sat. Feb 15th, 2025

எம் ஜி ஆர் வேடத்தில் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா

ByKalamegam Viswanathan

Jan 17, 2025

சோழவந்தான் அருகே எம் ஜி ஆர் வேடத்தில் வந்து எம்ஜிஆரின்பிறந்தநாளை கொண்டாடிய ரசிகருக்கு சால்வை அணிவித்து, இனிப்பு ஊட்டி வரவேற்ற ஒன்றிய செயலாளர்.
மதுரை மாவட்டம் முன்னாள் தமிழக முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா உலகெங்கிலும் அவரது ரசிகர்களும் அதிமுகவினரும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், அன்னதானம் வழங்கியும் நலத்திட்டங்கள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் மன்னாடிமங்கலத்தில் எம்ஜிஆரின் வேடம் அணிந்து வந்த அவரது ரசிகருக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி இனிப்புகள் ஊட்டி எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மன்னாடி மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாள் விழாவில் எம்ஜிஆர் போன்று வேடம் அணிந்து வந்து கட்சியினரை குஷிப்படுத்தினார். அவரை வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் அதிமுகவினர் வரவேற்று சால்வை அணிவித்து இனிப்புகள் ஊட்டி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன், கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கருப்பட்டி தங்கபாண்டி, தென்கரை ராமலிங்கம் தியாகு, பேட்டை மாரி சுரேஷ், வைகை சேகர் பத்தாவது வார்டு மணிகண்டன், எஸ் .பி .மணி, குருவித்துறை தண்டாயுதம், மன்னாடிமங்கலம் தெற்கு கிளைச் செயலாளர் ராஜபாண்டி, கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமு, வடக்கு கிளை முத்துப்பாண்டி, மணல் கிருஷ்ணன், நிர்வாகிகள் அழகுமலை, எஸ்.பி. கந்தன், பி. கே. ஆர். மயில் தங்கச்சாமி, சேகர், தமிழ் கோசை ஆறுமுகம், ராஜேந்திரன், உப்பிலிசாமி, சக்திவேல் பாண்டி கருப்பு. செல்வம், கிருஷ்ணமூர்த்தி, காமாட்சி ராஜாங்கம், மனோகரன், துரைப்பாண்டி, ஏலக்குடி முருகன், பங்கு ராஜ் பாண்டி, சின்ன கருப்பன், புதுப்பட்டி கணேசன், பிரபாகரன், தாமோதரன், அழகு பாண்டி மற்றும் மன்னாடிமங்கலம் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் மணி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.