• Sat. Apr 26th, 2025

உயிரிழக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பத்துலட்சம் ரூபாய் நிச்சயம்

ByKalamegam Viswanathan

Jan 17, 2025

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் போது, உயிரிழக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் நிச்சயம் வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா கொண்டாடும் விதமாக மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது ,

மதுரை தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் குறித்த கேள்விக்கு :

மதுரை தூத்துக்குடி ரயில் திட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்பாக எடப்பாடியார் ஆணைக்கிணங்க அதிமுக தலைமையில் போராட்டத்தை அறிவித்திருந்தோம்.

நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் இது குறித்து குளறுபடிகள் நடந்து விட்டதாக கூறி விளக்கம் அளித்துள்ளனர். அந்த சூழ்நிலையை கருதி போராட்டத்தை கைவிட்டோம்.

ஆனால் ரயில்வே திட்டம் செயல்படுத்திட கால தாமதமானால் அதிமுக சார்பில் போராட்டத்தை நடத்தி அகல ரயில் பாதை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிமுக முன்னேற்போம்.

மாடு பிடி வீரர் உயிரிழப்பு முதல்வர் உதவித்தொகை அறிவித்தது குறித்து கேள்வி:

மாடுபிடி வீரர் உயிரிழந்தது வருத்தத்துக்குரியது இழப்பீடு அதிகமாக வழங்குவது அனைவரின் கோரிக்கை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு எந்திரமாக நடைபெற்றது.

முழுமையாக அந்த பகுதி மக்கள் கலந்து கொள்ளவில்லை ஆன்லைன் டோக்கன் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு. வழங்கப்படவில்லை.

ஆன்லைன் திட்ட மூலம் வேண்டுமென்றே அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பலவீன படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது.

சிறந்த காளைகளை வேறு ஜல்லிக்கட்டுக்கு அனுப்பப்பட்டது. ஆன்லைன் திட்டம் சிறந்த திட்டம் ஆனால் ஆன்லைன் திட்டத்தில் தவறு நடப்பது என்பதற்கு உதாரணம் நமது மதுரை ஜல்லிக்கட்டு தான் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம மக்களை எடுத்து நடத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு வீரர்கள் உயிரிழப்பதற்கு மக்கள் வருத்தப்படுவது நியாயம் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது நாங்கள் வேண்டுகோள் வைப்பது ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு, மாட்டு உரிமையாளர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குவது என திமுக அறிவித்திருக்கிறது.

அதிமுக ஆட்சி வந்தால் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் வழங்குவதற்கு சூழ்நிலையை உருவாக்குவோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்வையாளர் இறப்பு பாதுகாப்பு ஏற்பாடு குறித்த கேள்விக்கு:

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் குளறுபடிகள் இருந்தன. ஆன்லைன் முன்னுரிமை பக்கத்து கிராம மக்களுக்கு வழங்கப்படாமல் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாதனைகளை சொல்கிறார்களே தவிர வேதனைகளை சொல்வதில்லை மேலும் தாமதமாக போட்டி நடைபெற்றது.

அவனியாபுரத்தில் 6.30 நடைபெற்ற போட்டி அலங்காநல்லூரில் 8:15 மணிக்கு நடைபெற்றது. துணை முதல்வரின் வரவேற்புக்காக காத்திருந்தது எனவே குளறுபடிகள் மாவட்ட நிர்வாகத்தால் நடைபெற்றது.

பாலமேட்டிலும் பரிசு பொருட்கள் சரியாக கிடைக்கவில்லை கிராம மக்களை அன்போடு நடைபெற்றால் போட்டி நன்றாக நடக்கும் அரசின் தலையிட்டால் இப்படி நடக்கிறது.

அதேபோல் பாதாள சாக்கடை திட்டம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மதுரையில் கிழக்கு தொகுதிக்கு மட்டும் கொண்டு வரப்பட்டது. தற்போது திருப்பரங்குன்றத்திலும் செயல்படுத்திட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்ப நிதியின் நண்பர்களால் மாவட்ட ஆட்சியருக்கு இருக்கை வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கு குறித்த கேள்விக்கு:

அதை நான் கவனிக்கவில்லை டிவியிலும் சரியா பார்க்கவில்லை. மாவட்ட ஆட்சியர் தங்களுக்கான தகுதியினை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் எல்லாம் சமூகமாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதற்காக அவர்களுக்கான தகுதியை இழக்கக்கூடாது.

இது மட்டுமா தவறு இந்த ஆட்சியில் எல்லாமே தவறு துணை முதல்வர் பதவி கொடுத்ததே தவறு. இதுபோன்று தவறுகளை மக்கள் பார்க்கும் போது அவர்கள் தான் | பலவீனப்பட்டு போகிறார்கள் என ராஜன் செல்லப்பா கூறினார்.