மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவுதினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வினர் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க. வை உருவாக்கியவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் இன்று. இதனையொட்டி அ.தி.மு.க. வினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். ன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி நகரில்புதிய பேருந்து நிலையம் முன்பு கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பொள்ளாச்சி எம்.எல்.ஏ. ஜெயராமன், நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர்களான ஜேம்ஸ் ராஜா, வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை சட்டமன்றத் தொகுதி சூளேஸ்வரன் பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் கார்த்தி, ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்..,
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சிறுவர் முதல் முதியவர் எல்லோருக்கும் பிடித்த தலைவர். தன் வாழ்நாளில் சினிமாவால் சம்பாதித்த பணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கினார். எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் அ.இ.அ.தி.மு.க. தலைவர் முதல் தொண்டர்கள் வரை தமிழகத்தில் ஆளும் லஞ்ச ஊழல் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் போலீசை கைப்பாவையாக வைத்து பொய் வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். என் மீதும் கட்சி நிர்வாகிகள் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது இது நான் சட்டப்படி சந்திப்பேன் எனவும் முன் ஜாமீன் கோர மாட்டேன் எனவும் தெரிவித்தார்.