• Fri. Apr 26th, 2024

வழக்கம்போல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை

Byகாயத்ரி

Jan 28, 2022

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகின்ற நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படும். மற்றும் இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இதை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவை வார நாட்களில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் திங்கள்- சனி வரை காலை 5.30 முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். நெரிசல் மிகு நேரங்களில் (காலை 8-11, மாலை 5-8) 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 10 வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.இந்த அறிவிப்பு பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *