• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல்: சோத்துப் பாறை பாலமலை வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா அடுக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை பாலமலை ஊரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன், கருப்பண்ண சுவாமி, விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இந்து எழுச்சி முன்னணி பெரியகுளம் பொறுப்பாளர் சுவாமி கோகுலகண்ணன் வேத மந்திரங்கள் ஓதி அபிஷேக, ஆராதனைகள் செய்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.


அதனை தொடர்ந்து இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது: இந்த கோவில் கட்டி பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் செய்ய இயலாமல் இருக்கிறது என்று தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்திற்கு வந்து ஊர் பெரியவர்கள் நிறுவனர் R.P. ரவிஜீ மற்றும் மாவட்டத் தலைவர் K.ராமராஜ் ஜீ மற்றும் பொறுப்பாளர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சில வேத சாஸ்திரிகளை அழைத்துக்கொண்டு அந்த ஊர் கோவிலுக்கு சென்று சில பூஜைகளையும் யாகங்களையும் செய்து அந்த தடைகளை நீக்கி இன்று (ஜன.28) மிகவும் சீரும் சிறப்புமாக இந்த கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற்றது. மேலும் தேனியை சேர்ந்த பல ஆன்மீக அன்பர்களை இந்து எழுச்சி முன்னணி தொடர்பு கொண்டு நன்கொடைகளை வாங்கி வழங்கியுள்ளது.

மேலும் இந்த கும்பாபிஷேக அன்னதானத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்ட தேனி வினோரா பவுண்டேஷன் உரிமையாளர் ராஜன் விஷால் அவர்களுக்கு தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது, என்றனர்.