நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக்கை கூக்கல் எட்டு ஊர் நிர்வாகிகள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சந்தித்து ஆதிவாசி மக்கள் நிரம்ப வாழும் சிரியூர், ஆணைகட்டி பகுதிகளுக்கு செல்லும் சாலை கடந்த 10 ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளது எனவும், படுக சமுதாய மக்களின் முக்கிய திருகோவில்களுக்கு செல்ல இவ்வழியை தங்கள் பயன்படுத்தி வருவதாகவும், கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும், எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை எனவும், தற்போது திமுக அரசில் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தந்திடக்கோரி மனு வழங்கினர்.
அப்போது, மாவட்ட துணை செயலாளர் ஜே.ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் ஏ.நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஏ.முஸ்தபா, உதகை வடக்கு ஒன்றிய செயலாளர் மா.தொரை, பொதுக்குழு உறுப்பினர் எம்.சதகத்துல்லா, உதகை பஞ்சாயத்து யூனியன் தலைவர் கே.மாயன் உட்பட எட்டு ஊர் நிர்வாகிகள் கே.எஸ்.மணி, தேவராஜ், மனோகரன், கூக்கல் காளி, உயிலட்டி ஆல்தொரை, ராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.