முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டு.
மாற்றுத்திறளானிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை 3ஆயிரம் ரூபாயாகவும்,கடும் ஊனமுற்றோருக்கு 5ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும்,
மாற்றுத்திறானாளிகளுக்கு இலவசவீடு வழங்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் சாலையில் அமர்ந்தபடி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.