• Mon. Jan 20th, 2025

சத்குரு அமித்ஷா சந்திப்பு!

ByKalamegam Viswanathan

Jan 5, 2025

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை நேற்று (04/01/2025) டெல்லியில் சந்தித்தார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, “சத்குரு அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்திய ஆன்மீகம் குறித்தும், சமூகங்களை மாற்றி அமைப்பதில் அதன் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடினோம்” எனக் கூறியுள்ளார்.

அதே போல் சத்குரு பதிவிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பாரதத்தின் மாண்புமிகு உள்துறை அமைச்சரை சந்தித்ததில் மகிழ்ச்சி. நமது தேசத்தின் நாகரீக அம்சங்களில் அவரது ஈடுபாடும் ஆர்வமும் போற்றத்தக்கது.” எனக் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது அமித்ஷாவிற்கு ஆதியோகி திருவுருவச் சிலையை சத்குரு பரிசளித்தார்.