
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் நடராஜபிள்ளை சாவடியில் அமைந்துள்ள பிரசுத்தி பெற்ற அருள்மிகு ஞான விநாயகர் ஆலயம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோவில் மற்றும் பத்ரகாளியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

மூன்று ஆலயங்களும் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது கோவிலில் கடந்த வைகாசி 16 தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று மகாபூர்ணாகதி தீபாராதனை உடன் பூஜிக்கப்பட்ட கடங்கள் கோவிலை சுற்றி வலம் வந்து மூன்று கோவில்களுக்கும் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.

