• Mon. Aug 3rd, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை.

ByM.JEEVANANTHAM

Jun 3, 2025

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி உருவபடத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூர் கடை வீதியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் தலைமையில் கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து மயிலாடுதுறை சித்தர்காட்டில் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி தலைமையில் கலைஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வி எஸ் பிரபாகர் வழக்கறிஞர் மாவட்ட துணை அமைப்பாளர் பிரபு ஆகியோர் முன்னிலையில் கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி இனிப்புகள் வழங்கினர். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.