• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தொழிற்சங்கம் சார்பாக மே தின பொதுக்கூட்டம்..,

ByK Kaliraj

May 2, 2025

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பாக மே தின பொதுக்கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது .

கழக அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான
ராஜவர்மன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நரிக்குடி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர்.முத்தையா
தலைமைக்கழக பேச்சாளர். .பாவலர் ராமசந்திரன்

இந்நிகழ்வில் கழக அம்மா பேரவை துணை செயலாளர் சேதுராமானுஜம், கழக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் சித்திக்,மாவட்ட கழக அவைத்தலைவர் ஜெயபெருமாள், நரிக்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சந்திரன், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வேங்கைமார்பன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முருகன்,திருச்சுழி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துராமலிங்கம், திருச்சுழி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியாண்டி,திருச்சுழி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கருப்பசாமி,அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் யோகவாசுதேவன், அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சங்கரலிங்கம், அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சேதுபதி,சாத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தேவதுரை,சாத்தூர் நகர கழக செயலாளர் கிருஷ்ணன், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலமுருகன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,மாவ‌‌ட்ட சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,வார்டு மற்றும் கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர், கழக தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கழக போக்குவரத்து பிரிவு துணை செயலாளர்,மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர்
திரு.P.V.வீரேசன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.