• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

புதிய ஊராட்சி அலுவலகத்தை திறந்து வைத்த வெங்கடேசன் எம் எல் ஏ..,

Byசோலைஆதி

Mar 13, 2026

சோழவந்தான் அருகே சி.புதூர் கிராமத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஊராட்சி அலுவலகத்தில் பாலமேடு ஹரிஹரன் தலைமையில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.

சுமார் 13 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம்,சித்தாலங்குடி கிராமத்தில் சுமார் 18 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம் மற்றும் சுமார் 9 லட்சம் செலவில் கட்டப்பட்ட ரேஷன் கடை ஆகிய புதிய கட்டிடத்தை வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் பாலா ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தனபாலன், மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட பிரதிநிதி செல்வம், சித்தாலங்குடி கிளைச் செயலாளர் ஆனந்தகுமார் துரை ரவி மற்றும் நிர்வாகி ஜெயக்குமார் சேர்த்துக் கொள்ளவும் ஊராட்சி ஊராட்சி மன்ற செயலாளர் காசிலிங்கம் உள்பட அரசு அதிகாரிகள்,பணியாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல் இரும்பாடி ஊராட்சிக்குட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம், சின்ன இரும்பாடியில்புதிய அங்கன்வாடி கட்டிடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவற்றையும் வெங்கடேசன் எம் எல் ஏ திறந்து வைத்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரிபண்ணைசெல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி உள்படபலர் கலந்து கொண்டனர்.