• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே 12- ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!!

ByP.Thangapandi

Mar 13, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள சீல்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பவுன்ராஜ் -சாந்தா தம்பதியரின் மகள் ஆர்த்தி., இவரின் தந்தை சிறுவயதிலே இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆர்த்தி என்ற மாணவி எழுமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ், ஆங்கிலம், வேதியியல் என 3 பாடங்களுக்கான தேர்வு எழுதிய நிலையில் இன்று இயற்பியல் தேர்வு எழுத இருந்த நிலையில் நேற்று இரவு
வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமறிந்து விரைந்து வந்த எழுமலை போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.,

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஆர்த்திக்கு சிறுவயதில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பதாகவும் இந்நிலையில் அடிக்கடி உடல் நலக்குறைவு
ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.