• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மருதுபாண்டியர் நினைவு தினம்: டாஸ்மாக் மூடல்

ByA.Tamilselvan

Oct 27, 2022

மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என தகவல்
மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுவதையொட்டி அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனைஸ்தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.