• Sun. Mar 16th, 2025

மேளதாளங்கள் முழங்க வெற்றிலை பாக்குடன் நூதன முறையில் மனு

ByM.JEEVANANTHAM

Mar 11, 2025

அரசுக்கு சொந்தமான கோயில்கள் பாழடைந்து கிடக்கின்றன, திருப்பணி செய்ய வலியுறுத்தி மேளதாளங்கள் முழங்க வெற்றிலை பாக்குடன் அறநிலையத்துறை இணை ஆணையருக்கு நூதன முறையில் மனு அளித்த அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இந்து அறநிலையத்துறை ஆட்சித்துறை இணை ஆணையர் அதிகாரத்திற்கு உட்பட்ட மாங்குடி சுயம்பு நாதர் ஆலயம், கஞ்சனூர் சுயம்பிரகாசர் ஆலயம், காசி விஸ்வநாதர், பந்தநல்லூர் செல்லியம்மன் ஆலயம் ஆலயம் ஆகியவை திருப்பணி செய்யப்படாமல் பாழடையும் நிலை உள்ளது. ஆலயங்களில் வவ்வால் அடைந்து மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலைகளும் இந்து அறநிலையத்துறை சார்பில் ஆலயங்களுக்கு இன்னும் நிதி வந்து சேரவில்லை.

இதன் காரணமாக ஆலயத்தை புதுப்பித்தல் மற்றும் கும்பாபிஷேகம் செய்தல் போன்ற திருப்பணி வேலைகள் தொடங்கப்படாமல் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயங்கள் சிதைவடையும் நிலை உள்ளது. இதனை அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் அகில பாரத இந்து மகா சார்பில் நூதனமான முறையில் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க வெற்றிலை பாக்குடன் கோரிக்கை மனுவை எடுத்து வந்து மயிலாடுதுறை அடுத்த சித்தர் காட்டில் அமைந்துள்ள இந்து அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்கு அகில பாரத இந்து மகாசபை நிர்வாகிகள் வந்தனர் .

தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வெற்றிலை பாக்குடன் அதிகாரிகளுக்கு வழங்கினர். விரைவில் திருப்பணிகள் தொடங்காவிட்டால், மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் நிகழ்ச்சியில் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் ராமநிரஞ்சன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.