• Mon. Apr 21st, 2025

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழப்பு.

ByG. Anbalagan

Mar 21, 2025

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆண் யானை உயிரிழப்பு.
வயது முதிர்வு மற்றும் வயிற்றுப் பகுதியில் ஒட்டுண்ணி அதிகமாக இருந்ததால் யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி கோட்டம் சிங்காரா வனசரகத்தில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது நார்தன் ஹே காப்புகாடு மற்றும் லீக்வுட் தனியார் எஸ்டேட் எல்லையில் ஆண் யானை ஒன்று உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர்.பின்பு உடனடியாக சிங்காரா வனச்சரகர் மற்றும் முதுமலை வெளி மண்டல துணை கள இயக்குனர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வன கால்நடை மருத்துவர்களுடன் சென்ற அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து உயிரிழந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது இறந்திருப்பது 48 வயது மதிக்கதக்க ஆண் காட்டு யானை என்பதும் உடற்கூராய்வின் முடிவில் , இறந்தது சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என்பதும், யானை கடந்த சில நாட்களாக சரிவர உணவு உட்கொள்ளாமல் உடல் மெலிந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. யானையின் வயிறு மற்றும் குடல் பகுதியில் அதிகப்படியான ஒட்டுண்ணி புழுக்கள் காணப்பட்டது. யானை வயது முதிர்வு குறித்த காரணங்களால் இறந்திருக்க கூடும் என தெரியவந்துள்ளது.மேலும்
ஆய்வக பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.