



இந்தியாவிற்கு கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகைக்கு பின்பே பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனை என்ற மக்களின் அத்தியாவசிய தேவைகளை பார்த்து பார்த்து செய்தனர். நாகர்கோவிலில் 102 ஆண்டுகளுக்கு முன்பு “சேசு சபை” அருட்பணியினர்களால் துவக்கப்பட்ட நாகர்கோவில் கார்மல் பள்ளி, குமரி மாவட்டத்தில் கல்வி புரட்சியின் அடையாளம்.
நாகர்கோவில் ஏப்ரல் 12_ம் தேதி இந்திய அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழி திறனறிதல் தேர்வில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 46 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் உதவித்தொகை தோ்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு எழுதும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அடுத்த 4 ஆண்டுகளுக்கு மொத்தமாக ரூ.48,000 உதவித்தொகை கிடைக்கும். அதாவது ஒவ்வொரு வருடமும் ரூ.12,000 வீதம் மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான தேசிய வருவாய் வழி திறனறிதல் தேர்வை நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் எழுதி இருந்தனர். இதில் 46 மாணவர்கள் தேர்ச்சி பெற்று கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகளைப் பெற்றுள்ளனர். இதில் மாணவர் ஹெரால்டு சாம் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்று கார்மல் பள்ளிக்கும்,குமரி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட அளவில் ஒரே பள்ளியைச் சார்ந்த 46 பேர்கள் தேர்ச்சி பெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் சே.ச .பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச., என். எம் .எம். எஸ். தேர்வின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஜேசு நேசம் சே.ச இணை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ஜெரால்ட் சைமன், உதவித் தலைமை ஆசிரியர்கள் ஜெலாஸ்டின், ஜாண் உபால்ட், அமல்ராஜ் ஆகியோர் பாராட்டினர். மாணவர்களையும்
பயிற்சியளித்த ஆசிரியர்கள் அனைவரையும் பள்ளி ஆசிரியர் அலுவலர்கள் முன்னான் மாணவர் அமைப்பினர், பெற்றார் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பாராட்டினர்கள்.

