

ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது அமைந்துள்ள தர்கா மசூதிகளை பராமரிப்பதற்காக ஜமாத் சார்பாக போலீஸிடம் அனுமதி கேட்டனர். ஆனால் கோயில் நிர்வாகம் தங்களை கேட்காமல் எந்த வேலையும் செய்யக்கூடாது என கோவில் நிர்வாகத்தின் சார்பில் மனு அளித்தனர். இதனால் பராமரிப்பு வேலைக்கு அனுமதி மறுத்தனர். போலீசார் இதனால் இன்று மதியம் தொழுகைக்குப் பின்பு போராட்டம் நடத்த போவதாக ஜமாத் சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனால் திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை துணை ஆணையர் பிரதீப், ஜமாத் பெரியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்த பின்பு எந்த முடிவும் தாங்கள் எடுக்க வேண்டும் என கூறினார். அதனை ஒப்புக்க கொண்ட ஜமாத் இஸ்லாம் மக்கள் கலைந்து சென்றனர்.
