ஸ்ரீ தினரட்ச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதி சக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயம் 18ம் ஆண்டு மகா சிவராத்திரி மயான கொள்ளை மாசி பெருவிழா நடைபெற்றது
சென்னை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ தின ரட்சிச்சகி பீடம் அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி அங்காளபரமேஸ்வரி ஆலயம் 18ம் ஆண்டு மகா சிவராத்திரி மயான கொள்ளை மாசி பெருவிழாவானது 9ம் தேதி அன்று கொடியேற்றி சக்தி மாலை அணிதல், மற்றும் கோ பூஜை, விக்னேஸ்வரர் பூஜை, அபிஷேக தீப ஆராதனையுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து மகா பிரதோஷம்,மகா அபிஷேகம்,சூறைக் கூடை ஏந்தி வீதி வலம் வருதல், மகா சிவன்ராத்திரி பதிவிளக்கு அலங்கார தீப ஆராதனை, தாய் வீட்டு சீர் செய்தல், பிரம்ம கபால அபிஷேகம், பால்குட அபிஷேகம் மற்றும் அன்னதானமும் வழங்கபட்டது. அதன் பின்னர் ஆதிசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் இருந்து அருள்மிகு சிந்தாங்கி முடிதிரித்தி பிரம்மா கபாலம் ஏந்தி சகல மேல வாத்தியங்கள் முழங்க வான வேடிக்கையுடன் புஷ்ப விநாயகர் விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் எம்ஜிஆர் நகர் ருத்திர பூதியாம் மயானத்தில் மயான கொள்ளை பூஜையும் அதன் பின்பு சிறப்பு அலங்காரத்துடன் திருவீதி உலா நடைபெற்றது இந்த விழாவில் ஆலய மருளாளார் V.குமாரி அம்மா, ஆலய நிர்வாகி MR.விஜயமணி முன்னிலை வகித்தனர் மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் என பலபேர் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்.