சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மகா சிவராத்திரி விழா பக்தர்கள் சாமி தரிசனம்மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி ஸ்ரீ கருப்புசாமி கோவில் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. எட்டூர் கிராம பொதுமக்கள் மற்றும் சென்னாக்கல் நண்பர்கள் சார்பாக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் நாள் அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டாவது நிகழ்ச்சியாக நடன நாட்டிய கலை நிகழ்ச்சி மற்றும் இரவு அன்னதானம் நடைபெற்றது. உசிலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ரெட் காசி, செல்லம்பட்டி யூனியன் சேர்மன் கவிதா ராஜா, திமுக செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன், AIFB சார்பாக இளையரசு,ஆர். கே. சாமி, ஊராட்சி தலைவர் கலியுக நாதன், துணைத் தலைவர் செல்வி செல்வம் ,எட்டூர் கமிட்டி நிர்வாகிகள், விக்கிரமங்கலம் எட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர்.