• Wed. Dec 11th, 2024

சோழவந்தான் மற்றும் திருவேடகம் சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா

ByKalamegam Viswanathan

Feb 19, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளய நாதா சிவாலயம் மற்றும் திருவேடகம் ஏடகநாதர் சிவாலயம் ஆகியவை பிரசித்தி பெற்றது. இத்திரு கோவில்களில் மகா சிவராத்திரி நான்கு கால பூஜை உடன் நடைபெற்றது. சனிகிழமை இரவு 9 மணி 12 மணி அதிகாலை 2 மணி 4 மணி ஆகிய நான்கு கால பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கோவிலை வலம் வந்து சிவபெருமான் தோத்திரப் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா, பேரூராட்சி கவுன்சிலர், கலைவாணி பள்ளி நிர்வாகி எம் வள்ளி மயில், பேரூராட்சி கவுன்சிலர்,நகர அரிமா சங்கத் தலைவர் எம் மருதுபாண்டியன் ஆகியோர் செய்து இருந்தனர். இதே போல பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் மருதோடைய சிவபெருமான் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது.