• Fri. Feb 20th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா..,

Byமுகமதி

Feb 20, 2026

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி 41 வது வார்டு மேட்டுப்பட்டி கேட் அருகில் குறிஞ்சி நகர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இரண்டாவது அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அந்த வகையில் இந்த கோவில் அப்பகுதியில் உள்ள குறிஞ்சி நகர், பாலாஜி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், சாளுவன் நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களால் உருவாக்கப்பட்டு கடந்த 19 1 2014 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 20.02.2026 குடமுழுக்கு என்று சொல்லப்படும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக இரண்டு கால பூஜைகள் நடைபெற்றது. முதல் கால பூஜை யாகசாலை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், நாராயண பூஜை, கோ பூஜை ஆகியவையுடன் தொடங்கி வைக்கப்பட்ட முதல் யாக கால பூஜை உடன் இன்று நிறைவு கால பூஜை பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

அதன் தொடர்ச்சியாக கடம் புறப்பாடு, யாகசாலையில் வைக்கப்பட்டு வேதாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க நேற்றைய தினம் பல்வேறு ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கலச நீரை மேளதாளம் முழங்க கோயில் வளாகம் சுற்று பகுதியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அருள்மிகு செல்வ விநாயகர் கோவில் கோபுரக் கலசத்தின் மீது சரியாக கருட பகவான் வட்டமிட்டு ஒன்பதரை மணியளவில் விநாயகர் ஆலயத்தில் கோபுரக் கலசத்தில் புனிதக் கலச நீர் ஊற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக குறிஞ்சி நகர், பாலாஜி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், சாலுவன் நகர், திருநகர், பொதுமக்கள் மற்றும் புதுக்கோட்டை நகரப் பகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.